6 16
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியில் நீண்டகாலத்தின் பின் தூய்மையானவர்கள் மட்டும் இடம்…! என்கிறார் இரா.சாணக்கியன்

Share

தமிழரசுக்கட்சியில் நீண்டகாலத்தின் பின் தூய்மையானவர்கள் மட்டும் இடம்…! என்கிறார் இரா.சாணக்கியன்

தூய்மையான உறுப்பினர்களை மட்டுமே வேட்பாளர்களாக இலங்கை தமிழரசுக்கட்சி களமிறங்கியுள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில் (Illankai Tamil Arasu Kachchi) மட்டுமே போட்டியிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு (batticaloa) – கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன், நீண்டகாலத்திற்கு பின்னர் தூய்மையான தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர்களைக் கொண்டு இலங்கை தமிழரசுக்கட்சி களமிறங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது எமது வேட்பாளர்கள் சிறந்த வேட்பாளர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. எமது கட்சியில் ஊழல் அற்ற, கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபடாதவர்கள் எமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியுள்ளோம்.

ஏனைய கட்சிகள் இது தொடர்பில் பேசமுடியாது. கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் அதிகளவில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்றார்கள்.

தமிழ் தேசிய பரப்பில் கொலைசெய்யாதவர்கள்,கடத்தல் செய்யாதவர்கள்,காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏனைய பிரதான கட்சிகளை பார்த்தால் தமிழ் பேசும் மக்களாகவே களமிறக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி,தேசிய மக்கள் சக்தி இரண்டிலும் இரு இனங்களையும் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றார்கள்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் எமது கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது சிலசில விமர்சனங்கள் இருந்தது.ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு தமிழரசுக்கட்சியை ஆதரிக்ககூடிய வகையில் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலத்தில் போட்டியிட்ட இருவர் மட்டுமே இம்முறை போட்டியிடுகின்றோம்.ஏனைய ஆறு வேட்பாளர்களும் புதிய முகங்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். கடந்த நான்கு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தாலும் கூட இலஞ்சம், ஊழல்மோசடி, காணி அபகரிப்பிலேயே அவர்களின் காலங்களை கடத்தியிருந்தார்கள்.

இன்னுமொருவர் இதுதான் நான் இறுதிமுறை என்று தேர்தலில் போட்டியிட்டு அவரது கூடுதலான காலத்தினை லண்டனில் கழித்துவிட்டு தேர்தலில் குதித்திருகின்றார்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியும் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற ஒரேயொருவர் நான்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எனதுவேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை பெறவேண்டும் என்பதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...