இலங்கைசெய்திகள்

யாழில் காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் இழிவான செயல்

Share
10 29
Share

யாழில் காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் இழிவான செயல்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆண் காவல்துறை உத்தியோகஸ்தரை தவறான முறைக்குட்படுத்த முயன்ற காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அந்த காவல்நிலையத்தில் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் சிலருடன் மாதகல் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு, பொறுப்பதிகாரிக்கு தெரிந்த வெளிநபர்கள் சிலரும் வந்திருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் கடலில் குளித்த போது, பொறுப்பதிகாரி, தன்னுடன் அழைத்து சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவருடன் தவறான சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதனை அவர் தடுத்து எச்சரித்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு, காவல்நிலையம் வரும் வழியில், விடுதி ஒன்றுக்கு காவல்துறை உத்தியோகஸ்தரை அழைத்து சென்று, அங்குள்ள அறை ஒன்றிற்குள் பூட்டி தவறான முறைக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இது தொடர்பில் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டு புத்தகத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக எழுதியுள்ளார்.

தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் பின்னர் பொறுப்பதிகாரி தன்னை பழிவாங்கும் வகையில் தொடர்ந்து செயற்படுவதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், காவல்துறை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

 

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...