நாஹினி சீரியலில் நடிக்கும் நடிகை சிவன்யாவை பார்ப்பதற்காக மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.
தொலைக்காட்சி தொடர்களிற்கு அடிமையாகிய 13,11,7 வயதான மூன்று சிறுமிகளே வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
குறித்த மூன்று சிறுமிகளும் ஹிங்குராங்கொடையிலிருந்து வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு சென்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு செல்லும் நோக்கத்திலேயே வீட்டை விட்டு வெளியுறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் யாழ்ப்பாணம் வந்த சிறுமிகள் இடம்தெரியாமல் மீண்டும் தமது வீடுகளிற்கே திரும்பியுள்ளனர்.
இது தொடர்பில் ஹிங்குராங்கொடை பொலிசார் சிறுமிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நிலைமை தொடர்பில் சிறுமிகளின் பெற்றோரிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment