தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கு நடந்தது!!

தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கு நடந்தது!!

தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கு நடந்தது!!

தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கு நடந்தது!!

தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயல்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வினவியுள்ளார்.

தமிழர்கள் ஒற்றையாட்சியைக் கோருகின்றார்களா? சமஷ்டியாட்சி கோருகின்றார்களா? தனி நாட்டைக் கோருகின்றார்களா? என்பதை அறிய துணிவு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரத் வீரசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த கருத்தை முன்வைக்கும் கஜேந்திரகுமார் எந்த நாட்டிலிருந்து கூறுகின்றார் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும்.

விடுதலைப் புலிகளின் இந்த அபரிமித ஆசையால் தான் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்க வேண்டி வந்தது. மீண்டும் தனி நாடு கோரி குருதிக்களரியை ஏற்படுத்த கஜேந்திரகுமார் விரும்புகின்றாரா?

இது ஒற்றையாட்சியுள்ள பௌத்த – சிங்கள நாடு. இங்கு சமஷ்டிக்கோ, தனிநாட்டுக்கோ இடமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Exit mobile version