தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த செந்தில் தொண்டமான்
பதுளை மாவட்டத்திலுள்ள பசறை- கோணக்கலை தோட்டத்திற்கு கிழக்கு மாவட்ட ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த தோட்ட விஜயத்தை இன்றையதினம் (07.07.2023) மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் (Field Officer)அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்நிலையில் தொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ப்பிடப்பட்டுள்ளது.