20 10
இலங்கைசெய்திகள்

செல்வம் அடைக்கலநாதன் – கஜேந்திரகுமார் விசேட சந்திப்பு

Share

செல்வம் அடைக்கலநாதன் – கஜேந்திரகுமார் விசேட சந்திப்பு

ரெலோ (telo)கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதனுக்கும்(selvam adaikalanathan) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் (gajenrakumar)இடையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,,,

விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் குறித்த அரசியல் அமைப்பை உறுதியாக அறிவித்துள்ள நிலையில்,அதனை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எதிர் நோக்கப்போகின்றோம் என்ற விடையம் குறித்தும்,குறிப்பாக தமிழ் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்,புதிய அரசியல் அமைப்புகொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு,தொடர்பாகவும் கலந்துரையாட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளோம்.

நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி நாங்கள் இக் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்பதை கேட்டு இருந்தோம். அந்த வகையில் எமது தீர்வு திட்டத்தில் ஒரு பிரதியையும் வழங்கி மேலதிகமாக புது வருடத்தின் பிற்பாடு,நாங்கள் மீண்டும் கூடி தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை ஆழமாக ஆராய்வதற்கு இனங்கியுள்ளோம்.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனோடும் இவ் விடயம் தொடர்பாக பேசி புதிய வருடத்தோடு மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் யோசித்து இருக்கின்றோம்.

அந்த சந்திப்பு பேரவையினுடைய தீர்வு திட்டத்தை ஆழமாக ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,சிவில் சமூக தலைவர்களையும் உள் வாங்கி மேலதிகமாக இவ்விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடையங்களை நாங்கள் வருகின்ற ஒரு சில நாட்களில் சிறிதரன் எம்.பி யோடும் பேசி முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...