சட்டவிரோதமாக அதிக விலையில் அரிசி விற்பனை : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

WhatsApp Image 2024 12 12 at 2.03.34 PM

சட்டவிரோதமாக அதிக விலையில் அரிசி விற்பனை : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் அரிசின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இன்று (11) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் அமில ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல மற்றும் அக்கரப்பத்தனை மற்றும் ஹோல்புறுக் ஆகிய பகுதிகளில் இது குறித்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களை கைது செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நுவரெலியா மாவட்டம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version