முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால் பாதுகாப்பு வழங்கத்தயார் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மகிந்த அதிகாரிகளுக்கு குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது மகிந்த ஜயசிங்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச பெருந்தொகை மக்கள் பணத்தை நீண்ட காலமாக விரயமாக்கி உள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.