images 5 3
இலங்கைசெய்திகள்

அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்: 9929 பாடசாலைகள் டிசம்பர் 16 இல் திறப்பு!

Share

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய தீர்மானங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் உள்ள மொத்தப் பாடசாலைகளில் பெரும்பாலானவை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அனர்த்தங்களுக்கு அதிகளவில் முகங்கொடுத்துள்ள வலையங்களை உள்ளடக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது எனவும் அறிவித்தார்.

மேலும், டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும், அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும், 2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் 2025.12.22ஆம் திகதி வரை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் 2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரை, முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடாத்தப்படாத ஏனைய பாடசாலைகள் 2026 ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், அது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படும், என்றும் சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கீழே பார்வையிட முடியும்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...