சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பல பாடசாலைகள் இன்று (டிசம்பர் 16) மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சு அடுத்த சில மாதங்களுக்கான பாடசாலைச் செயற்பாடுகள் மற்றும் விடுமுறைகள் குறித்த கால அட்டவணையை அறிவித்துள்ளது.
இதேவேளை, இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படும் 2026 ஜனவரி மாதத்தில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

