தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

24 668aae2e0fddd 14

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவிக்கு நேர்ந்த கதி

தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் தொடருந்தில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது, இன்று (07) இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் 17 வயதுடையவர்கள் என்றும் அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான மாணவன், மாணவி, அம்பலாங்கொடையில் ஹிரேவத்த மற்றும் தெல்துவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மாணவி படுகாயத்துக்குள்ளாகியுள்ளதுடன், மாணவன் சிறிய கீறல் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தொடருந்து மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான பாடசாலை மாணவி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் சுயநினைவின்றி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version