பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்

பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்

பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்

பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்

பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை, வனசிரிகம, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

10 வயதுடைய அவர் மகுலெல்ல கல்லூரியில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

சிறுமியின் தகவலுக்கமைய, இந்த சிறுமி வழமை போல் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை முச்சக்கரவண்டிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் குடிக்க ஏதோ கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவை கசப்பாக இருந்ததால், அதனை துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடி பாடசாலைக்கு சென்றுள்ளர்.

பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, ​​வகுப்பு ஆசிரியர் சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார். குறித்த சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version