22 12
இலங்கைசெய்திகள்

பெற்றோரை ஏமாற்றிய மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்

Share

பெற்றோரை ஏமாற்றிய மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்

மிஹிந்தலை பேருந்து நிலையத்தில் நின்ற 2 சிறுமிகள் வேனில் ஏற்றி சென்று தகாத முறைக்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை விகாரைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக காத்திருந்த 8ஆம் வகுப்பு மாணவிகளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சீப்புக்குளம் குக்குலேவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும், சிவலகுளம் சமாதிகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பையில் மறைத்து கொண்டு வந்த ஆடையை பொது கழிப்பறையில் மாற்றிய சிறுமிகள், அங்கிருந்து விகாரைக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது குறித்த இடத்திற்கு வேனில் வந்த பாடசாலை மாணவி ஒருவரின் காதலன் எனக் கூறிய நபர் 2 சிறுமிகளையும் வேனில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குடும்பத்தினர் சிறுமிகளின் வயதை கருத்திற் கொண்டு வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காதலன் இரண்டு சிறுமிகளையும் மிஹிந்தலையில் உள்ள ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று இரண்டு நாட்கள் ஒரே அறையில் தங்க வைத்துள்ளதுடன், இரண்டாவது நாள் சந்தேக நபரின் நண்பர் ஒருவர் அறைக்கு வந்து மற்றைய மாணவியுடன் தங்கியுள்ளார்.

மறுநாள், சந்தேக நபர்கள் இரண்டு சிறுமிகளையும் ரொட்டவெவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சசிறுமிகள் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறுமிகள் வழங்கிய வாக்குமூலங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...