3 39
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரின் விசேட நடவடிக்கை

Share

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரின் விசேட நடவடிக்கை

புலமைப்பரிசில் கசிவு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

சுதந்திரமான நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் பணித்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியின் மேம்பாடு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...