இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம், ஷெங்கன் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து நியமனங்களையும் (Appointments) நேற்று (நவ 4) முதல் இனிவரும் காலங்களில் VFS குளோபல் மூலம் நிர்வகிக்கப்படும் புதிய நிகழ்நிலை அமைப்பு (Online System) வழியாகவே பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.
விசா விண்ணப்பதாரர்கள் இனிமேல் https://visa.vfsglobal.com/lka/en/deu/login என்ற இணைப்பைப் பயன்படுத்தி VFS வலைத்தளம் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
பழைய முறைப்படி ஏற்கனவே செய்யப்பட்ட பதிவுகள் எந்த இடையூறும் இன்றி வழக்கம்போலச் செயற்படுத்தப்படும் என்றும் இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த மாற்றம், ஷெங்கன் விசா விண்ணப்பச் செயல்முறையைச் சீரமைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

