அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்!

3 42

அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்!

இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, சதொச நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விற்பனை செய்ய முன்வராதமையால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய அரிசி தட்டுப்பாட்டை போக்குவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version