9 13
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் குற்றங்களில் நெருங்கிய தொடர்பில் முக்கிய அதிகாரிகள்: பகிரங்கப்படுத்தும் சரத் பொன்சேகா

Share

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் கொழும்பில் ஊடவியலாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்‌ச மற்றும் அவருடன் நெருக்கத்தில் இருந்த முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி துவான் சுரேஷ் சலே,எந்த விதாரன ஆகியோர் நேரடி தொடர்புப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

(12.10.2025) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

கோட்டாபய செய்த பல குற்றங்களுக்கு இவர்கள் தான் உதவி செய்தவர்கள். ஓய்வுபெற்ற பின்னரும் எந்த விதாரண கோட்டாபயவுடன் இருந்தார்.இவை தொடர்பில் ஆழமான விசாரணைகள் செய்தால் கண்டுபிடிக்கலாம்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகரவுக்கு இது தொடர்பான சில சாட்சியங்கள் தெரியும்.

அக்காலப்பகுதியில் கொழும்பு பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய ராஜபக்‌ச தான் கவனித்துக்கொண்டிருந்தார். மாதத்திற்கு ஒரு முறை புலனாய்வு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

நான் வடக்கு கிழக்கில் தான் இருந்தேன்.என்னையும் லசந்த கொலையில் சம்பந்தப்படுத்த பார்த்தனர். எனக்கு லசந்தவுடன் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. கோட்டாபயவுக்கு தான் இருந்தது.

மிக் விமானம் கொள்வனவு தொடர்பில் தகவல் வெளியிடுவதாக லசந்த தெரிவித்திருந்தார். அப்போது என்னிடம் இருந்த புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைத்து இந்த கொலைக்கு இராணுவத் தளபதி தான் காரணம் என காட்ட முயன்றனர். குற்றப்புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் நன்கறிவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...