செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிசாருடன் இணைந்தே மணல் கொள்ளை: அடித்துக் கூறும் சுமந்திரன்

Share
Sumanthiran
Share

வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டேன்

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள் அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாரிடம் தகவல் வழங்கும் போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே பொலிசாருடன் இணைந்து இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபணமாகின்றது. எனவே இந்த குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

#SrilnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...