புத்தளத்தில் சனத் நிசாந்த ஓய்வெடுக்காமைக்கான காரணம்
மே 9 போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள சனத் நிசாந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத நிலையில் நேற்றைய தினம் அவர் கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனத் நிசாந்தவின் மறைவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், கட்சிக்கும், புத்தள மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பாகும். சனத் நிஷாந்த புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்ட மக்களுக்காக உழைத்தவர்.
புத்தளம் மற்றும் சிலாபத்தில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கொழும்பு செல்லும் வழியில் அவர் இந்த விபத்தை சந்தித்துள்ளார். மே 9ஆம் திகதி போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம் எரிக்கப்பட்டது.
எனவே புத்தளத்தில் ஓய்வெடுக்க வீடு இல்லாத நிலையில், கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின் படி, இராஜாங்க அமைச்சரின் சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

