இலங்கைசெய்திகள்

உயிரிழந்த சனத் நிஷாந்தவின் சாரதியின் பதிவால் சர்ச்சை

Share
tamilnaadi 93 scaled
Share

உயிரிழந்த சனத் நிஷாந்தவின் சாரதியின் பதிவால் சர்ச்சை

கட்டுநாயக்ககொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியான பிரபாத் எரங்க தனது வட்ஸ்அப் கணக்கில் ஒரு குறிப்பை பதிவிட்டிருந்தார்.

“நாளைய தினத்திற்குள், எனது பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என கூறுங்கள்.நான் அதைப் படிக்க விரும்புகிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தார்.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி பிரபாத் எரங்க, பொலிஸாரின் விசாரணைகளின் போது விபத்து தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விரைவில் கொழும்பை அடைய முயற்சிப்பதாகவும், அப்போது சனத் நிஷாந்த காரில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

விபத்தின் போது, ​​வாகனம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதம் 29ஆம் திகதி மாரவில பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தங்கொட்டுவையில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

17 4
இலங்கைசெய்திகள்

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா! கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற நபர் முதலில் தனக்கு கால் வைக்க...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...