24 6603ee2c3ee8e
இலங்கைசெய்திகள்

சம்பந்தனின் ஆசை இதுவே!…கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி

Share

சம்பந்தனின் ஆசை இதுவே!…கனடா மக்களுக்கு அநுர கூறிய செய்தி

இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜையாக இருக்க விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தம்மிடம் கூறியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

cவாழ் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“சம்பந்தனுடைய சில அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஒருநாள் சம்பந்தன் என் கைககளைப் பிடித்துக் கொண்டு “அநுர, நான் இலங்கையன் என்பதனை இந்த உலகிற்கு சத்தமிட்டுக்கூற ஆசை படுகின்றேன்.

ஆனால் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜை என கூறிக்கொள்ள நான் விரும்பவில்லை.” என கூறினார். அது நியாயமானது அல்லவா.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே என்னிடம் “என்னால் இந்த நாட்டில் செல்லக்கூடிய அதிகபட்ச தூரத்தை நான் அடைந்து விட்டேன். நான் அமைச்சுப் பதவியின் மூலம் அதனை அடைந்து விட்டேன்.” என்றார்.

ஜெயராஜின் இனத்துவ அடிப்படையில் அவரினால் இந்த நாட்டில் அமைச்சராக மட்டுமே பதவி வகிக்க முடியும் என உணர்ந்தால் அது நியாயமானதல்ல.

ஜனாதிபதியாக முடியுமா பிரதமராக முடியுமா என்பது வேறு கதை. எனினும், ஒருவர் தனது இனம், மதம், கலாச்சாரத்தின் அடிப்படையில் ஓர் பதவியை அடையவே முடியாது என கருதும் சூழ்நிலையானது ஆரோக்கியமானதல்ல.

நாம் என்ன கூறினாலும், உனக்கு என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினாலும், ஒருவர் தான் இரண்டாம் தரப் பிரஜை என உணர்ந்தால் இந்த நாட்டில் ஏதோ ஓர் பிரச்சினை இருக்கின்றது என்பது நிதர்சனமானது.

அரசியலில், அரசியல் சந்தர்ப்பங்களில் நியாயமான முறையில் இணைந்து கொள்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.” என அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...