அரசியல்இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் எட்டு வருடங்கள் தங்கியிருந்த சம்பந்தன்

Share
images 3
Share

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் எட்டு வருடங்கள் தங்கியிருந்த சம்பந்தன்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்(Sampanthan) கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 8 வருடங்களாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க (Gayantha Karunathilaka) பெப்ரவரி 26, 2019 அன்று சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை இந்த வீடு அவருக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார். இப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே.

கடந்த ஓகஸ்ட் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றபோது இந்த உத்தியோகபூர்வ இல்லம் அவருக்கு வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்ட 52 நாள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற போதும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

இதேவேளை சம்பந்தன் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியிருந்தே விலகியிருந்தார் என்பதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பதவியில் தொடர்ந்தும் அவரே உள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...