24 6618d7ab45b63
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச பட்டாளத்தின் அரசியலுக்கு வரும் தேர்தல்களில் முடிவு கட்டுவோம்

Share

ராஜபக்ச பட்டாளத்தின் அரசியலுக்கு வரும் தேர்தல்களில் முடிவு கட்டுவோம்

எதிர்வரும் தேர்தல்களில் ராஜபக்ச கூட்டணியின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றியடைந்தே தீருவார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடும்.

மொட்டுக் கட்சிக்கும் அந்தக் கட்சியைப் பாதுகாத்து வரும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்வரும் தேர்தல்களில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ்வார்கள்.” – என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...