tamilni 338 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலை சாடுகிறார் சஜித்

Share

ரணிலை சாடுகிறார் சஜித்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

மேலும், 220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்தால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (22.11.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் ஆணைகளுக்கு மாறாக நாட்டு மக்களின் உண்மையான ஜனநாயகமே இப்போது முக்கியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழக்கு எண்ணைத் தவறுதலாகக் குறிப்பிடும் போது அதன் உள்ளடக்கத்தைப் பற்றி சிந்திக்காமல் வழக்கு எண்ணை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் கூறுவது வெட்கக்கேடானது.

வழக்கு எண் மாறினாலும், நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களின் பெயர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை நியமித்த 134 பேருக்கும் சரியாக ஒன்றை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது என்றாலும், அதனை வாசித்துப் புரிந்துகொள்ளும் திறன் ஜனாதிபதிக்கு இருந்தாலும், ஜனாதிபதியை நியமித்த 134 பேருக்கும் முட்டாள்தனமான திருப்தியை வழங்க அதே காரணத்தை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டமை வருந்தக்க விடயம்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது ‘மகிந்த திருடன் எமக்கு வேண்டாம்’ எனக் கூறி கத்தினாலும், திருடன் என்று அழைத்த நபருடன் பிறந்தநாள் கேக் வெட்ட ஜனாதிபதி சென்றார்.

ஜனாதிபதி தற்போது மக்கள் அபிப்பிராயம், மக்கள் ஆணையை புறம் தள்ளி, தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துச் செயற்பட்டு வருகின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முதலில் நடத்துவது ஜனாதிபதியின் பொறுப்பாகும். இவ்வாறு மக்கள் ஆணையை உரசிப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமாயின், கிடைக்கும் மக்கள் ஆணையின் கீழ் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...