12 16
இலங்கைசெய்திகள்

சஜித்தின் ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஆபத்தாக மாறும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

சஜித்தின் ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஆபத்தாக மாறும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கிற்கான அதிகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாச தமிழ் அரசுக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதியானது தமிழ் மக்களுக்கும் மிகவும் ஆபத்தான நிலையை உறுவாக்கும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் நீங்கள் ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கான காரணத்தை வினவிய போது அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியது என்ன?

“ஒவ்வொரு வேட்பாளரிடமும் பேசினோம். எங்களுக்கு இணக்கமான திட்டமிடலை சஜித் பிரேமதாச மேற்கொண்டுள்ளார். எனவே சஜித்துக்கு ஆதரவளிக்க முடிவு செய்தோம்” என்றார்.

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும், பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய மாகாணசபையை எமக்கு வழங்குவதாகவும் சஜித் உறுதியளித்துள்ளார்.

எமக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து கூட்டாட்சி நாடாக மாற்றுவோம் என சஜித் வாக்குறுதி அளித்ததாக மாவை சேனாதிராஜா கூறுகிறார்.

எனவே அநுரகுமாரவும் அதையே கூறுகிறார். இது அவரது தேர்தல் அறிக்கையின் 230ஆவது பக்கத்தில் உள்ளது.

அப்படியானால் ஏன் சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சஜித்துக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தார்? அநுரவை புறம்தள்ளி, சஜித்தை இவர்கள் ஆதரித்த இரகசியம் என்ன?

இந்த கருத்துக்கள் வெளிவந்தது யாருடைய வாயாலும் அல்ல. மாவை சேனாதிராஜாவின் வாயிலிருந்து.

2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பிரகடனத்தின்படி அதிகாரத்தை பிரிப்பதாக சஜித் எங்களுக்கு உறுதியளித்ததாக அவர் கூறுகிறார்.

தமிழ் அரசியல் தலைமைகள் சஜித்தை சுற்றி திரள்வது என்றால் இந்த ஒஸ்லோ பிரகடனத்தில் என்ன இருக்கிறது?

விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதலுக்கு பயந்தவர்களே ரணில் – சஜித்தின் அரசாங்கம்.

இன்று ரணில், சஜித், அநுர ஆகியோர் தமிழ் பிரிவினைவாதிகளின் சிறு வாக்கு தொகுதியை வெல்லும் போட்டியில் நாட்டை காட்டிக் கொடுக்கின்றனர்.

வடக்கு மக்கள் சர்வதேச நாடுகளின் அடக்குமுறையால் ஒடுக்கப்படுகிறார்கள், சிங்களவர்களின் அடக்குமுறையால் அல்ல.

நாங்கள் வடக்கே சென்றோம். தமிழ் மக்களிடம் பேசினார். அவர்களின் நலன்களும் கொழும்பில் இருந்து அரசியல் விளையாடும் பிரிவினைவாதிகளின் நலன்களும் ஒன்றல்ல இரண்டல்ல என்பதை புரிந்து கொண்டோம்” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...