சஜித் பிரேமதாஸவின் கோரிக்கை- IMF ஒப்பந்தத்தை இரத்துச் செய்க!

images 7

அண்மையில் ஏற்பட்ட பாரிய பேரழிவைத் (Disaster) தொடர்ந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு தேசியத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (டிசம்பர் 4) அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

புதியதொரு திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திய அவர், தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் தொடர்பில் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்:

சர்வதேச நாணய நிதியமுடனான (IMF) தற்போதைய ஒப்பந்தத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாட்டிற்குப் பொருத்தமான மற்றும் இப்போதைய நிலவரத்தை எதிர்கொள்ளக்கூடிய புதியதொரு ஒப்பந்தத்திற்குச் செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேரழிவுக்குப் பின்னரான மீள் கட்டுமானப் பணிகளுக்குப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உடன்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே சஜித் பிரேமதாஸவின் கருத்தாக உள்ளது.

Exit mobile version