மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி: சஜித்தின் வேண்டுகோள்

12 14

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவரது அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தொடர்ந்தும்,

எதிர்வரும் மின்பட்டியல் தொடக்கம் மின்சாரக் கட்டணத்தை 25-35% வீதம் வரையில் அதிகரிக்கும் செயற்பாடொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதாக வாக்களித்து பதவிக்கு வந்தவர்கள், அதனை மேற்கொள்ளாத காரணத்தினாலேயே மின்கட்டண அதிகரிப்பிற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்களித்து பதவிக்கு வந்த அரசாங்கம், அதற்கு மாற்றமாக கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version