புதிய வருடத்தில் புதிய பாதையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் தீர்வுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி நுழையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்திற்கு மிகவும் தோல்வியடைந்த வருடமாக இந்த வருடம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் பொது மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரையிலான விலையை ஒப்பிடுகையில், 1 கிலோ போஞ்சி ரூ.210ல் இருந்து ரூ.440 ஆகவும், கரட் ரூ.160ல் இருந்து ரூ.560 ஆகவும், 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.420ல் இருந்து 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
புதிய வருடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், நிதி நெருக்கடியைக் கடப்பதற்கும் ஒரு திட்டத்துடனும் தெளிவான பார்வையுடனும் புதிய ஆண்டிற்குள் காலடி எடுத்து வைப்பார்கள் .
எதிர்காலத்தில் தேசத்தை உயர்த்துவதற்கான செயற்திட்டத்தை முன்வைப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews