20
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியின் தீர்மானத்தில் மாற்றமில்லை: சாகர காரியவசம் அறிவிப்பு

Share

மொட்டு கட்சியின் தீர்மானத்தில் மாற்றமில்லை: சாகர காரியவசம் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சியின் 92 உறுப்பினர்கள் சந்திப்பு நடத்தியிருந்ததாகவும், இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கட்சியுடன் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என அறிவிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, இவ்வாறு அறிவித்துள்ளார் என சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது சில அமைச்சர்களும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக கூறிய போதிலும், பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் தமது கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் வேட்பாளரைத் தவிர்ந்த வேறு ஒருவருக்கு ஆதரவளித்தால் அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...