புலம்பெயர் சமூகத்தினர் அனைவரும் கடும்போக்குவாதிகள் அல்ல

tamilni 344

புலம்பெயர் சமூகத்தினர் அனைவரும் கடும்போக்குவாதிகள் அல்ல

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைவரும் கடும்போக்குவாதிகளோ அல்லது நாட்டுக்கு எதிரானவர்களோ அல்ல என தேசிய பாதுகாப்பு குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் சமூகத்தினை நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் மக்களை முதலீடு செய்ய ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கு நலன்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையை ஈர்ப்பு மிக்க ஓர் இடமாக மாற்ற வேண்டுமாயின் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த அனைவரையும் இனவாதிகள் என்ற அடிப்படையில் பார்க்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version