பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்! மகிந்த

24 6643cf495a449

பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்! மகிந்த

பாலஸ்தீன(Palestine) மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச (Mahinda Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் போது கலந்து கொண்டு நேற்று(14.05.2024) உரையாற்றும் ​போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நாடுகளுடன் இலங்கை கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.

அதே போன்று பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version