அடுக்குமாடி கட்டிடத்தில் எரிவாயு வெடிப்பில் ஒருவர் பலி! ஏழு பேர் காயம்
ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் எரிவாயு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மத்திய ரஷ்யாவின் Sterlitamak நகரில் உள்ள பகுதி Bashkortostan. இங்குள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீர் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”வீட்டு எரிவாயுவை கையாள்வதில் கவனக்குறைவாக மக்கள் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் எரிவாயு வெடிப்புகள் பொதுவானவை என்று கூறப்படுகிறது. மேலும் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.