23 9
இலங்கைசெய்திகள்

சிரிய இராணுவ தள விவகாரம் : புதிய நகர்வுக்கு தயாராகும் ரஷ்யா

Share

சிரிய இராணுவ தள விவகாரம் : புதிய நகர்வுக்கு தயாராகும் ரஷ்யா

சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா (Russia) நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன.

சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சிரியாவிற்குள் தனது இராணுவ தளங்களை பராமரிப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ் கூறிய கருத்தை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், சிரியாவில் உள்ள தூதர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒழுங்கை பராமரிப்பு நடவடிக்கைகளை தமது நாடு நிறைவேற்றும் என ரஷ்யா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இஸ்லாமிய அரசில் இருந்து பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் சிரியர்களின் வேண்டுகோளின் பேரில் தமது நாட்டு படைவீரர்கள் கலந்துகொண்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா தற்போது சிரியாவில் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது அவை டார்டஸில் ஒரு கடற்படைத் தளம் மற்றும் லதாகியா துறைமுக நகருக்கு அருகிலுள்ள கெமிமிம் விமானத் தளம் என்பனவாகும்.

சிரியாவில் பஷர் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவுக்குப் பிறகு தோன்றிய மிகவும் சக்திவாய்ந்த கிளர்ச்சிக் குழுவாக நுஸ்ரா முன்னணி என்ற பெயரில் அதிகாரபூர்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், சன்னி இஸ்லாமிய போராளிப் பிரிவு பல மேற்கத்திய சக்திகளால் பயங்கரவாத அமைப்பாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஐ நீக்க முடியும் என்று இங்கிலாந்து அரசாங்கம் சமீபத்தில் கூறியமை கூறியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...