24 664aaa563f52d
இலங்கைசெய்திகள்

ஐ.தே.கவுக்கு தாவும் ஆளும் – எதிரணி எம்.பிக்கள்…!

Share

ஐ.தே.கவுக்கு தாவும் ஆளும் – எதிரணி எம்.பிக்கள்…!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) உறுப்பினரும் அதிபர் ஆலோசகருமான ஆசு மாரசிங்க (Asu Marasinghe) தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், அரசமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலே முதலில் நடத்தப்படும்

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை. எனவே, அதிபர் தேர்தல் முதலில் என்பது உறுதி.

ஒக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும். நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் அதிபருக்கே உள்ளது.

எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழிசமைக்கமாட்டார்.

ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிபர் தேர்தலையே முதலில் கோருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...