நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5,000 ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். குறித்த விடயத்தை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பேரிடர் சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மத்திய வங்கியின் ஆலோசனைகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்:
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன்களை மீளச் செலுத்துவதற்கான காலத்தை, பாதிப்புகளின் அடிப்படையில் 3 முதல் 6 மாதங்களுக்குத் தள்ளுபடி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறுகிய காலத்துக்குள் அவசர நிலைமைகளின்போது புதிய கடன்களை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கியால் சகல வங்கிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

