இலங்கையை வந்தடைந்த பிரித்தானிய இளவரசி: யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்

tamilni 185

இலங்கை வந்தடைந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேன், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவதற்காக இன்று (10.01.2024) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

தொடர்ந்து, இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான 75 வருட உறவை பிரதிபலிக்கும் விதமாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த விஜயத்தில், இளவரசி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் சென்று அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version