சர்ச்சையை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் திருமணம்

சர்ச்சையை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் திருமணம்

சர்ச்சையை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் திருமணம்

சர்ச்சையை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் திருமணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தனது மகனின் திருமணம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளாார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தனது மகன் ஆயேஷ் அபேகுணவர்தனவின் திருமணம் பெருந்தொகை செலவில் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான காணாளியினை சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் ஜே.வி.பி செயற்பாட்டாளர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காணொளியில் மணமகனும், மணமகளும் உலங்கு வானூர்தியில் வந்து இறங்கியுள்ளதாகவும், அவர்களை சுற்றி பல சொகுசு வாகனங்கள் சென்றுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் படங்களும், காணொளிகளும் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தனது மகனுக்கு 20 வயது எனவும், இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், அவர் இன்னும் சட்டக்கல்லூரியில் படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன் மீதான இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்து சட்டத்துறைகளிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version