இலங்கைசெய்திகள்

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

10 27
Share

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின்(india cricket ) தலைவர் ரோாகித் சர்மா(rohit sharma) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை திடீரென விலக்கி கொண்டது அந்த அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு(Gautam Gambhir) பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா(india) அவுஸ்திரேலிய(australia) டெஸ்டின் ஐந்தாவது போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியது அவரது ஓய்வுக்கான முன்னறிவிப்பு என பலர் கருதினர். முதல் மூன்று போட்டிகளில் ரோகித் ஆட்ட திறனில் இல்லாததும் கடைசி போட்டியில் இருந்து விலகியதும் பேசுபொருளானது.

இருப்பினும் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ரோகித் ஒரு பேட்டியை அளித்தார். அதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி ஓய்வு அறையில் என்ன நடந்தது என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளன.

அதில், ரோகித் சர்மா டெஸ்டுக்குப் பிறகு விலக முடிவு செய்தார் என்றும் ஆனால் அவருக்கு நெருக்கமான நலன் விரும்பிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவை அவர்கள் வற்புறுத்தி தடுக்கவில்லை என்றால் அப்போதே அவர் ஓய்வை அறிவித்திருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ரோகித் ஓய்வு அறிவுக்கும் முடிவில் இருந்து யு டர்ன் அடித்தது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிடிக்கவில்லை என்றும், ரோகித் ஓய்வு பெறுவதையே கம்பீர் விரும்பினார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இது குறித்து கிரிக்கெட் வட்டாரங்கள் தற்போது கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....