tamilni 273 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

Share

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

கொழும்பு, பொரளை லேக் டிரைவ் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர சீன வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத மூவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு Su Zu Qing என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் வர்த்தகர், அவரது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

துப்பாக்கியைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் கை, கால்களையும் கட்டிவிட்டு திருடியுள்ளனர்.

இதன்போது டொலர் உட்பட பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் 11 கையடக்க தொலைபேசிகள், 07 மடிக்கணினிகள், கைக்கடிகாரம், உள்ளூர் நாணயம், 05 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிசிடிவி அமைப்பின் டிவிஆர் பகுதி உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...