நத்தார் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளை

tamilni 446

நத்தார் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளை

உடப்பு பகுதியில் நத்தார் தேவ ஆராதணைகளில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற கோடீஸ்வரர் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நத்தார் தினமன்று அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறால் பண்ணை மற்றும் தென்னந்தோட்டங்களுக்கு உரிமையாளரான செல்வந்தர் ஒருவரின் வீட்டில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம் மற்றும் பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் ஜன்னல் ஒன்றை உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version