ஓமந்தையில் அதிகாலை விபத்து

tamilni 279

ஓமந்தையில் அதிகாலை விபத்து

ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினால் இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் கன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இச் சம்பவம் இன்று (19.11.2023) அதிகாலை ஓமந்தையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கன்ரர் ரக வாகனம், ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்து கன்ரர் வாகனத்தினை பின்னால் மோதியது.

இதனால் கன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வாகனம் தடம்புரண்டது.

இதனால் வாகனத்தில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பினார்கள்.

Exit mobile version