24 662772ea14b8b
இலங்கைசெய்திகள்

யாழ். மானிப்பாய் பகுதியில் விபத்து

Share

யாழ். மானிப்பாய் பகுதியில் விபத்து

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) அனுமதிக்கபட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (23.4.2024) மதியம் யாழ். மானிப்பாய் (Manipay) – காரைநகர் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில், பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், சாரதியான 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.

யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...