24 665d5135e0486
இலங்கைசெய்திகள்

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

Share

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கம்பகா (Gampaha) மாவட்டம் மஹபாகே நேற்று (02) 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ராகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று (02) கொழும்பு (Colombo) கொட்டாவை அத்துருகிரி வீதியில் மெண்டிஸ் வளைவுக்கு அருகில் அத்துருகிரியவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த மூவர் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த 42 மற்றும் 54 வயதுடைய ஹிக்கடுவை மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நேற்று இரவு நிட்டம்புவ, கொழும்பு – கண்டி (Kandy) வீதியில் முருதாவல சந்திக்கு அருகில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நடந்து சென்ற நபர் மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...