இலங்கையில் 3 ஆவது அலையை உருவாக்கிய டெல்டா பரவலை போன்று ஒமிக்ரோன் பரவலும் இரு மாதங்களில் 5 ஆவது அலையை உருவாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 5 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதன் பரவல் வீதம் மிக அதிகம் என்று ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தோடு சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment