நாடாளுமன்றத்தில் மூன்று பிரிவுகளின் பிரதானிகள் உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் 112 ஊழியர்களுக்குக்கு நேற்று 14 ஆம் திகதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 28 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி சில வாரங்களுக்குள் கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 49 ஆக அதிகரித்துள்ளது.
#SrilankaNEws
Leave a comment