மருந்துகளின் விலையை குறைந்தபட்சம் 15%ஆல் அதிகரிக்க வேண்டும் என்று மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்களை வழங்க முடியாது என வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மருந்து இறக்குமதியாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையானது மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சுடன் இணைந்து 2021 ஒகஸ்டில் மருந்துகளின் விலையை 9% உயர்த்த அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment