11 5
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல்

Share

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (4) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை கொண்டு செல்லப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, வாகனமும் அதன் சாரதியும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் நிறையுடைய 250 அரிசி மூடைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்த விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறு ஒரு தொகுதி அரிசி மூடைகள் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிந்த பல அரசியற் கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
02 2
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் பலகட்சி ஜனநாயகத்திற்கு ஆபத்து: ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மீது கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் பலகட்சி ஆட்சி முறையை அழித்து, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக...

01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...