அரிசி, சீனி, பருப்பு விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு

pjimage 24 81

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளன என்று இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி, சீனி, பருப்பு ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளன என்று அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள டொலருக்கான கேள்வி குறைவடையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version