நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டுக்கான இறக்குமதிக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
டொலர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இத்தீர்மானத்தை முன்வைத்தார்.
இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் டொலர் தட்டுப்பாடு சார்ந்து பேச்சுவார்த்தைகள் நடாத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியவசிய பொருட்கள், எரிபொருள், மருந்து மற்றும் ஏனைய தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
#SriLankaNews