இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு தடை

Share
24 663f084a07fcd
Share

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு தடை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள மாதங்களில் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் ​போது அரசியல்வாதிகளை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றின் மூலம் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் பெயரில் அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடும் என பெப்ரல் (paffrel) அமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

மேலும், பிரசார நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சார்பானதாக அமைந்துவிடும் எனவும் குறித்த அமைப்பு கூறியிருந்தது.

இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...